ஊரடங்கு நேரத்தில் மக்களை பாதுகாக்கும் மும்பை நகர போலீஸ்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அதிலும், மும்பை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை நகர போலீஸாருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் ஷர்மா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Big round of applause to @MumbaiPolice for working round the ⏰ and making sure every single part of Mumbai is covered. It’s our duty to help them too by doing a little favour- STAY INDOORS pic.twitter.com/xImXoR5hsk
— Rohit Sharma (@ImRo45) April 11, 2020
ட்விட்டரில் மும்பை போலீஸார் ரோந்துப் பணி செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ள ரோகித், “மும்பை ஒவ்வொரு மனிதருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக நேரம் பார்க்காமல் பணிபுரியும் மும்பை போலீஸாருக்கு பெரிய கைதட்டல்களை கொடுப்போம். அவர்களுக்கு உதவுவதற்கு நாம் செய்ய வேண்டிய கடமை வீட்டில் இருபது மட்டும் தான்” என தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியாளர்கள் பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை – மத்திய வர்த்தக அமைச்சகம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM