கொரோனா தொற்றால் இத்தாலியை விட அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு. பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் பேரதிர்ச்சி.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 லட்சத்தை நெருங்குகிறது. 4 லட்சத்துக்கும் அதிகமானோர் முழுமையாக குணமடைந்து விட்டதால், பெருகுகிறது நம்பிக்கை.
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969ஆக அதிகரிப்பு.
மதுரையில் இன்று மீன், இறைச்சிக் கடைகள் திறக்க தடை
ஊரடங்கை நீட்டிப்பதில் பிரதமரின் முடிவுக்கு ஏற்ப தமிழகம் செயல்படும் என தலைமைச் செயலர் விளக்கம். இந்தியாவுக்கு வரவேண்டிய ரேபிட் கிட்கள் அமெரிக்கா சென்றுவிட்டதாகவும
தகவல்.
தெலங்கானாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு !
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும். காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் பிரதமரிடம் முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அதிகம் வாழும் பகுதியாக மாறிய ஐரோப்பா கண்டம். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருவதால் மக்கள் பேரதிர்ச்சி.