நாகையில் தனியார் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தை சேர்ந்த தனியார் மருத்துவர் குமரப்பன். இவரது பெயரை வெளியிட்டுள்ள நாகை மாவட்ட நிர்வாகம், இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் உடனே மருத்துவர்கள் திருமுருகன் 9751425002 மற்றும் ராகவன் 9500493022 ஆகியோரை தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் சமூக பரவலை தடுக்கவே கொரோனா பாதித்த மருத்துவரின் பெயரை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவர் குமரப்பனிடம் சிகிச்சை பார்த்தவர்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு கொடுக்க நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் இதுவரை 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 3,664 நபர்களில், 2,015 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 1,368 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என ட்விட்டர் பதிவு – 20லி பாலை கொண்டுசேர்த்த ரயில்வே!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM