மயிலாடுதுறையில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் சிலர் நாடகம் மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 53 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 969 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனிடையே கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என ட்விட்டர் பதிவு – 20லி பாலை கொண்டுசேர்த்த ரயில்வே!
இந்நிலையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் சிலர் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். ஊரடங்கை பொருட்படுத்தாமல் மக்கள் வெளியே சுற்றித் திரியும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வருவாய்த் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, நாட்டுப்புறக் கலைஞர்கள் சிவன், அகத்தியர், எமன் மற்றும் கொரோனா வைரஸ் வேடமணிந்து வீதி நாடகம் நடத்தினர்.
” ஊரடங்கை தளர்த்தினால் மிகப்பெரும் அபாயம் உண்டாகும்”- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இதில், ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய அவசியம், கைகளை கழுவுவது, முகக் கவசம் அணிவதன் அவசியம், தனிமைப்படுத்திக் கொள்வது குறித்தும் நாடகத்தில் விளக்கப்பட்டது. மேலும் மக்களை காப்பாற்றுவதற்காக அரசு அதிகாரிகள் காவல்துறையினர், சுகாதாரத் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.