சுகாதாரத் துறை செயலாளர் போலவே பேசிக்காட்டும் சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
கொரோனா தொற்றால் இன்று உலகமே ஊரடங்கிற்குள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி பாடி திரிந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த நபர்களும் இன்று வீட்டினுள் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். அவர்களின் பொழுதை கழிப்பதில் முக்கிய பங்காற்றுவது சமூக வலைதளங்கள் என்றால் அது மறுப்பதற்கு இல்லை. டிக் டாக்கில் கொரோனாவை கிண்டல் செய்து வீடியோ பதிவிடுவதும், நண்பர்களுடன் அரட்டை அடிப்பதுமாக அவர்களின் பொழுது கழிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பதிவிட்ட வீடியோக்களில் சில சமூக வலைதளங்களில் வைரலும் ஆகி விடுகிறது.
அந்த வகையில், அரசு பெண் அதிகாரி போல தத்ரூபமாக நடித்த சிறுமியின் வீடியோ பலரை கவர்ந்து வருகிறது. கொரோனாவால் எழுந்துள்ள சூழலால் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் செய்தியாளர்களிடம் தகவல்களை பகிர்ந்து வருகிறார். இதனால் கவரப்பட்ட சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த லோகானந்த ஸ்ரீ என்ற சிறுமி, சுகாதாரத் துறை செயலாளரைப் போலவே நடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ பலரையும் கவர்ந்து வருகிறது