இராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 2 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து அவரது குடும்பம் பெங்களூர் வரும் நிகழ்வு பலரையும் வேதனையடைய வைத்துள்ளது. 
 
நாடு முழுவதும் ஊரடங்குப் போட்டதிலிருந்து எத்தனையோ துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் அல்ல ராணுவ அதிகாரியின் குடும்பம் ஒன்று கூட பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை சட்டம் அனைவருக்கும் சமம் என்பதால் சில ராணுவ உயர் அதிகாரிகள்கூட ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
image
 
சவுர்யா சக்ரா விருது பெற்றவர் கர்னல் நவ்ஜோத் சிங் பால். வெறும் 39 வயது நிரம்பிய இளம் அதிகாரி. 2  பாரா ரெஜிமெண்ட்  அதாவது சிறப்புப் படைகளின் முன்னாள் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். மிகச் சிறப்பான சேவையால்  பல விருதுகளைப் பெற்றவர். இவர் நீண்ட காலமாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 
 
ஆனால் கடந்த 9 ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இவர் உயிரிழந்தார். தற்சமயம் நவ்ஜோத், பெங்களூருவில் இறந்துள்ளார். ஆனால் இவரது குடும்பத்தினர் வட இந்தியாவில் வசித்து வருகின்றனர். மகனின் இறப்புச் செய்தியை அறிந்த அவரது தந்தை ராணுவத்தில் தனி விமானம் மூலம் சடலத்தைக் கொண்டு வர விண்ணப்பித்துள்ளார். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதிகாரிகள் செய்வதறியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே ராணுவ விமானத்தை வழங்க மறுத்துள்ளனர். ஒரு ராணுவ அதிகாரிக்கே இராணுவ விமானம் மறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
 
image
 
இந்நிலையில், இறுதியாகத் தனது மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குருகிராமில் இருந்து ஏறக்குறைய 2 ஆயிரம் கிலோ மீட்டர் தரைவழியாகப் பயணிக்க முடிவு செய்து புறப்பட்டுச் சென்று கொண்டுள்ளார். அதுவும் குடும்பத்துடன். இவர்களுக்கு ராணுவ ரீதியான அனுமதி வழங்கப்பட்டாலும் உள்துறை அமைச்சகம் பெங்களூருக்குத் தரைவழியே பயணிக்க அனுமதி வழங்கியது. 
 
 
ஆபரேஷன் இன் ஜம்மு-காஷ்மீர் லோலாப் -இல்  பணியாற்ற 2002 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தில் கர்னல் பால்  நியமிக்கப்பட்டார். அங்கு நடந்த சண்டையில் அவர் ஒரு கை செயல்பாட்டை  இழந்தார். ஆனாலும் ஒரு கை மூலமாக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டார். அமைதிக்கான மூன்றாவது மிக உயர்ந்த விருதான சவுர்யா  சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு இருந்த புற்று நோய் கடுமையானதை அடுத்து அவர் உயர் சிகிச்சைக்காகப் பெங்களூருக்கு வந்தார். இப்போது அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவரது தந்தையும் இராணுவத்திலிருந்து  ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.