கொரோனாவால் பெரும் உயிரிழப்பை சந்தித்து வரும் இத்தாலி ஊரடங்கை வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய நாடுகளில் முக்கியமான ஒன்று இத்தாலி. அங்கு கொரோனா பாதிப்பால் 18,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கொரோனா பாதித்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தச் சூழலில் ஊரடங்கு தொடர்ந்து நீடித்தால், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், எனவே, விரைவில் அதை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்கங்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்தச் சூழலில், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஊரடங்கை வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார்.
சென்னை: கொரோனாவிலிருந்து மீண்ட 84 வயது மூதாட்டி..!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM