(கோப்பு புகைப்படம்)

ஊரடங்கை ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

image

 

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 911 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி பேசினார்.

image

இந்த சந்திப்பில் பல மாநில முதலமைச்சர்கள், அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கை ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் ஊரடங்கில் சில விலக்குகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.