கொரோனா தொற்று பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதுடன், வறுமை ஒழிப்பு முயற்சியை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள மனித இழப்பு பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. Dignity not Destitution என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில், 1990-ஆம் ஆண்டுக்குப்பிறகு முதன்முறையாக உலகளாவிய வறுமை அதிகரிக்கக்கூடும் எனவும்  கணிக்கப்பட்டுள்ளது.

image

உலகம் முழுவதும் தற்போது சுமார் 60 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள நிலையில், கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியும் நேரத்தில் அது மேலும் 55 கோடியாக அதிகரிக்கும் என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதுடன், வறுமை ஒழிப்பு முயற்சியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தமில்லாமல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐடி நிறுவனங்கள்?

 

image

 

கொரோனா பாதித்த 5 பேர் மூலம் 72 பேருக்கு பரவியது – தலைமைச் செயலர்

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான பேர் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படுவர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கையில் சுமார் 12 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியில் சிக்குவார்கள் என தெரியவந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் வறுமைக்கு தள்ளப்படுவோரின் எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழக நிபுணர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.