சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவர் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஆனாலும் நோய் தொற்று கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அத்தியாவசிய கடைகளான மளிகைக்கடை, காய்கறி கடை, கறிக்கடை, பெட்ரோல் பங்கு ஆகியவை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை அவைகள் இயங்குவதற்கான நேரம் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை என நிர்ணயிக்கப்பட்டுள்ள்து. கடைகளில் பொருட்கள் வாங்கும்போது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் ஊரடங்கின்போது இயங்கிய மசாஜ் சென்டர்… தப்பித்து ஓட்டம் பிடித்த பெண்கள்..!
இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவர் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மளிகைக்கடையையும் வீடு உள்ள சுற்றுவட்டாரத்தையும் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. மேலும் அவரின் மளிகைக்கடைக்கு சென்று பொருட்கள் வாங்கியவர்களை கண்டறியும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM