நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எஸ்.எஸ்.தோனி ராஞ்சியில் இருக்கும் தன்னுடைய வீட்டில் தோட்ட வேலைகளைச் செய்து வருகிறார். இதனை அவருடைய மனைவி சாக்ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“விமானத்தில் சொகுசு இருக்கையை விரும்பாத தோனி” சுனில் கவாஸ்கர் பெருமிதம் !
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 400ஐ தாண்டியது. 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 504 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 364 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 97 பேர் உயிரிழந்துள்ளனர். 125 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஐபிஎல் போட்டிகள் எப்போது நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளிலாவது அவர் விளையாடுவார் என்று பார்த்தால் அதுவும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாள்களில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடையே நேரடியாக உரையாற்றி வருகின்றனர். மேலும் தாங்கள் வீட்டில் இருக்கும்போது நிகழும் சுவாரஸ்ய நிகழ்வுகளையும் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.
“தோனி இப்போது அதனை விளையாடுவதில்லை” தீபக் சாஹர் !
ஆனால் இந்தச் சூழலில் தோனி என்ன செய்து கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவரது மனைவி சாக்ஷி, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் ராஞ்சியில் இருக்கும் தனது வீட்டின் தோட்டத்தில் இருக்கும் செடிகளை வெட்டி தோனி தோட்ட வேலை செய்கிறார். இந்த புகைப்படத்தைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் பலரும், “சேப்பாக்கத்தில் சிங்கம் மாதிரி நிக்க வேண்டிய மனுஷன தோட்ட வேலை செய்ய வெச்சுட்டீங்களே, அடேய் கொரோனா” என தன் நாயகனின் நிலையைப் பார்த்து கொரோனாவை திட்ட வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM