கொரோனா தொற்று மருத்துவ பணியாளர்களுக்கும் பரவி வருவதால் அச்சம் நிலவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றை தடுப்பதற்காக காவல் துறையினர், சுகாதார துறையினர், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கடுமையாக போராடி வருகின்றனர். குறிப்பாக மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் தங்களது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொரோனா என்பது தொற்று நோய் என்பதால் அது எளிதில் பரவி வருகிறது. ஆகவே கொரோனா தொற்றும் ஆபத்தானது மற்றவர்களை காட்டிலும் மருத்துவர்களுக்கு அதிகம் பரவ வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்கள் கடுமையான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணியாற்றி வருகின்றனர். முன்னதாக கொரோனா தொற்றானது விழிப்புணர்வு இல்லாதா மக்களுக்கும், வெளி நாடுகளில் இருந்த மக்களுக்கும் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மருத்துவர்களையும் பதம்பார்த்து வருகிறது.
வாரணாசி தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: கேட்டறிந்தார் பிரதமர் மோடி
அந்த வகையில் மும்பையில் அமைந்துள்ள நாயர் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கடந்த புதன் கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த அறை நண்பர் உட்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதல் கட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனபது தெரிய வந்துள்ளது இருப்பினும் அவர்கள் அடுத்தக்கட்ட பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கை எப்படி பாதுகாப்பாக தளர்த்தலாம் ? நிபுணர்கள் சொல்வது என்ன ?
அதே போல மும்பையின் தாதர் நகரத்தில் சுஷ்ருஷா மருத்துவமனையில் இரண்டு செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் கொரோனா ஊழியர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அங்கு புதிதாக எந்த நோயாளிகளும் சிகிச்சை பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.