தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மட்டுமே 96 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 199 லிருந்து 206 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும் அனைத்து பாதிப்புகளும் வெளிமாநிலம் சென்று வந்தவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தான் என்பதால், சமூகப் பரவல் இன்னும் தமிழகத்தில் ஏற்படவில்லி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#LIVE: தலைமைச் செயலாளர் செய்தியாளர் சந்திப்பு https://t.co/Yq6ekPxudX
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 10, 2020
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM