தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 40 ஆக உள்ளது. இன்று (10.04.2020), தேனியில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. மேலும், மாவட்டம் முழுவதும் 343 நபர்கள் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில், தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அதே போல, 388 நபர்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: `இதே நிலை நீடித்தால், மருந்துகள் தீர்ந்துவிடும்!’ – புலம்பும் தேனி தனியார் மருந்தக உரிமையாளர்கள்

பெரியகுளத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இது ஒருபுறம் என்றால், ஊரடங்கை மீறுபவர்கள் மீது தேனி போலீஸார் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்கள். அதன்படி, இதுவரை 144 தடை உத்தரவை மீறியதாக 4,318 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக வெளியே சுற்றியதாக 2,768 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஊரடங்கை மீறி வீட்டைவிட்டு வெளியே வருவபர்களை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது. தேனியைத் தொடர்ந்து, இன்று பெரியகுளத்திலும் ட்ரோன் மூலம் போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

பெரியகுளத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

Also Read: `ஒரே நாளில் 12 பெண்கள் உட்பட 16 பேருக்குக் கொரோனா பாசிடிவ்!’ அதிர்ச்சியளிக்கும் தேனி நிலவரம்

இது ஒருபுறம் என்றால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களில் மூவர் பெரியகுளம் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வசித்த பகுதிகள் சீல் செய்யப்பட்டுள்ளது. இன்று, அப்பகுதிகள் மட்டுமல்லாமல், பெரியகுளம் நகர் முழுவதும், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.