தென்கொரியா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிலுமே ஜனவரி மாத இறுதியில் தான் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தென்கொரியாவில் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் அமெரிக்காவிலோ நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.
இதனையடுத்து கொரோனாவுக்கு எதிராக தென்கொரியா நாடு எடுத்த நடவடிக்கைகளை தான் பல்வேறு நாடுகள் பின்பற்ற தொடங்கியுள்ளன. ஜனவரி மாத இறுதியில் தான் தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிலுமே முதல் கொரோனா தொற்று பதிவானது. ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் தென்கொரியா துரிதமாகவே செயல்பட்டது.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் தென்கொரியாவில் கொரோனா சோதனைக்கான உபகரணங்கள் உற்பத்தி தொடங்கின. கிட்டதட்ட 6 நிறுவனங்கள் மிக வேகமாக கொரோனா சோதனை உபகரணங்களை தயாரித்து கொடுத்தன. ஆனால் அமெரிக்காவிலோ இன்றளவும் கொரோனா சோதனைக்கான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு தேவாலயத்தில் இருந்து தான் பலருக்கு கொரோனா பரவியதை அறிந்த தென்கொரியா அரசு உடனடியாக தேவாலயத்திற்கு வந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சோதனை செய்தது. மக்கள் எளிதில் சோதனை செய்து கொள்ளும் வகையில், ஆங்காங்கே சோதனை மையங்களை அமைத்து முன்மாதிரி நாடாக மாறியது தென்கொரியா. நிபுணர்கள் வல்லுநர்களின் அறிவுரையை கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்தது தென்கொரியா.
ஆனால் அமெரிக்க அரசோ நிபுணர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்கவில்லை. வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் உடனே கண்டறியப்பட்டது தான் தென்கொரியாவில் தொற்று குறைய காரணம். தென்கொரியாவில் அனைவருக்கும் அரசின் சுகாதார காப்பீடு திட்டம் உள்ளது. எனவே ஏழை மக்களும் மருத்துவ செலவு குறித்த கவலையின்றி தாமாகவே முன் வந்து சிகிச்சை பெற்றனர்.
”மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ஆனால் அமெரிக்க மத்திய தர வர்க்கத்தினர், சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு செலுத்துமா அல்லது தாங்களே செலுத்த வேண்டுமா என்ற குழப்பத்தில் இருப்பதால் சோதனைக்கு முன்வருவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று பரவலை முதற்கட்டத்திலேயே தீவிரமாக எடுத்து கொண்ட தென்கொரிய அதிபர் மூன், தன்னிச்சையாகவே நடவடிக்கை எடுத்தார்.
ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் இதனை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. முரண்பட்ட கருத்துகளை தெரிவிப்பது சர்ச்சையில் சிக்குவது ,எதிர்க்கட்சியினரை குறை கூறுவது போன்றவற்றிலேயே ட்ரம்ப் பிஸியாக இருந்தார். தென்கொரியா மக்களுக்கு ஏற்கனவே சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் பரவலின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அனுபவம் இருந்தது.
கொரோனாவுக்கு மருந்தா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ? – பின்னணி என்ன ?
அது தவிர அமெரிக்கர்களை ஒப்பிடுகையில் தென்கொரியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட செயல்கள் மூலம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். தொழில்நுட்பம், பொருளாதாரம் என அனைத்திலும் தென்கொரியாவை விட பல மடங்கு முன்னிலையில் இருக்கும் அமெரிக்கா அலட்சியப் போக்கால் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இருக்கிறது என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM