ஊரடங்கால் மனைவியை பார்க்க முடியாமல் மனம் உடைந்த கணவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. திடீரென ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பலரும் தங்கியிருந்த இடங்களில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். போக்குவரத்து வசதி இல்லாமல் பலர் சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை பார்க்க முடியாமல் மனம் உடைந்த கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா பகுதியைச் சேர்ந்த ராகேஷ்(32) என்பவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அறிவிப்புக்கு முன் அவரது மனைவி தன்னுடைய அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். திடீர் ஊரடங்கு அறிவிப்பால் அவரால் மீண்டும் கணவர் வீட்டுக்கு வரமுடியவில்லை. இதனால் தன்னுடைய மனைவியை சந்திக்க முடியாமல் ராகேஷ் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா – உடன் தங்கியிருந்த 29 பேருக்கு சோதனை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM