’பேட்ட’படத்தின் காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
‘பீட்சா’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இந்தத் திரைப்படம் 2012 ஆண்டு வெளியானது. சின்னத் திரையில் குறும்படங்கள் மூலம் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து அவர் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார். முதல் படத்தின் மூலம் பெரும் புகழை சம்பாதித்த சுப்புராஜ், அதன்பின் குறுகிய காலத்திற்குள் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறினார். அதன் பின் ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ என சில படங்களை இயக்கினார்.
 
Rajinikanth on Petta: Karthik Subbaraj's film is an action-packed ...
 
அதன் அடுத்த கட்டமாகத் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான  ரஜினிகாந்த்தை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கினார். இது கடந்த 2019 இல் வெளியானது.  இந்தப் படம் வெளியாகி ஏறக்குறைய ஒரு ஆண்டு  நிறைவடைந்துவிட்டது. 
 
 
இந்நிலையில் இந்தப் படம் பற்றி சமூக வலைத்தளத்தில்  அப்போது கவனி தவறிய ஒரு முக்கியமான தகவலைப் பற்றி பலரும் பதிவிட்டு வருகின்றனர். ‘பேட்ட’ படத்தில் கார்த்திக் சுப்பராஜின் மனைவி சத்யா பிரேமா ஒரு சிறிய வேடத்தில் அதுவும் குறிப்பிடத்தக்கப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைப் படம் வெளியானபோது  பலர் கவனிக்கவில்லை.  ஏன் இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூட எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. 
 
Petta production designer Suresh Selvarajan on the dream ...
 
ஒரு ஆண்டு கழித்து இப்போது, சில நெட்டிசன்கள் அதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ‘பேட்ட’ படத்தின் ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டு சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றனர்.  அந்த ஸ்கிரீன் ஷாட்டில் சத்யா பிரேமா ரஜினிகாந்த்துடன் வரும் ஒரு காட்சிப் பதிவாகியுள்ளது. அந்தப் படத்தின் ரஜினிகாந்த், ஒரு வார்டனாக பொறுப்பேற்க வரும்போது ஒரு கடிதத்தை ஒருவரிடம் ஒப்படைப்பார். அந்தக் காட்சியில் இடம் பெற்றது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மனைவிதான் என்பதை நெட்டிசன்கள் தற்போது கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர்.
 
இதனிடையே கார்த்திக் சுப்புராஜ்  தனுஷை வைத்து  ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்தப் படம் வெளியீட்டிற்காக தற்போது காத்திருக்கிறார். கொரோனா அச்சத்தால் திரைத்துறை முடங்கிப் போய் உள்ளதால் அதன் வெளியீடு தாமதமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.