கொரோனா குறித்த தவறான தகவல்களுடன் கூடிய பதிவுகளை நீக்குமாறு ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா குறித்து ஃபேஸ்புக், டிக்டாக், ஹலோ போன்ற சமூக வலை தளங்களில் பொது மக்கள் பல தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் சில தகவல்கள் தவறான வழிகாட்டுதல்களை மக்களுக்கு தரும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதுடன் சுய மருத்துவத்தை ஊக்குவித்து உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப்-ன் நன்றி முதல் கொரோனாவிலிருந்து மீளும் மக்கள் வரை – இன்றைய முக்கிய செய்திகள்
இவை தவிர கொரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைளை பலவீனப்படுத்தும் வகையிலும் பல பதிவுகள் வெளியாவதாக மத்திய அரசு கருதியது. இதனால் இது போன்ற பதிவுகளை நீக்குமாறு அந்தந்த சமூக ஊடகங் களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீக்கப்படும் தவறான, ஆட்சேபத்திற்குரிய பதிவுகளை இட்டோரை பற்றிய தகவல்களை பாதிகாக்குமாறும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிற நாடுகளில் எத்தனை நாட்கள் ஊரடங்கு உத்தரவு?
கொரோனா தொடர்பாக மத்திய அரசு தரும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டாம் என ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு தவறான வழிகாட்டும் பதிவுகள் அதிகளவில் இடப்பட்டு வருவதாக தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்று அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையிலும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.