கொரோனா பரிசோதனைக்காக இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வருகின்றன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். அப்போது, “கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. 3,371 வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. 2500 வெண்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது. இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வரும்” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், “144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
#LIVE | கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி பேட்டி https://t.co/XNLDG84r5J
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 9, 2020
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM