கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவுடன் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோன்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
“ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம்” – பிரதமர் மோடி சூசகம்
இந்த குழுவினர் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சைக்கான வழிமுறைகளை மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான சர்வதேச அளவில் வெளியிடப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த 19 பேர் கொண்ட மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM