தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா சுகாதாரத்துறைச் செயலர் ஃபீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனைச் செய்யப்பட்டுள்ளதாகவும், 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியான கொரோனா பாதிப்பில் 163 பேருடன் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. அத்துடன் கோவை – 60, திண்டுக்கல் – 46, நெல்லை – 56, ஈரோடு – 58, திருச்சி – 36, நாமக்கல் – 41, ராணிப்பேட்டை – 27, செங்கல்பட்டு – 28.
மதுரை – 25, கரூர் – 23, தேனி – 40, தூத்துக்குடி – 22, விழுப்புரம் – 20, திருப்பூர் – 26, கடலூர் – 13, சேலம் – 14, திருவள்ளூர் – 13, திருவாரூர் – 13, விருதுநகர் – 11, தஞ்சாவூர் – 11, நாகை – 12, திருப்பத்தூர் – 16, திருவண்ணாமலை – 9, கன்னியாகுமரி – 14, காஞ்சிபுரம் – 6, சிவகங்கை – 6, வேலூர் – 11, நீலகிரி – 4, தென்காசி – 3, கள்ளக்குறிச்சி – 3, ராமநாதபுரம் – 2, அரியலூர் – 1, பெரம்பலூர் – 1 என கொரோனா பாதிப்பு உள்ளது.
கொரோனா தாங்குதலுக்கு ஆளாகும் மருத்துவர்கள் – கூடுதல் கவனம் எடுக்குமா அரசு?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM