தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் இந்தக் கொரோனா தொற்று பாதிப்பு ஆரம்பத்திலிருந்து அதிகரித்தபடியே இருக்கிறது. மார்ச் 31-ம் தேதி வரை பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சிங்கிள் டிஜிட்டாக இருக்க, ஈரோட்டில் 24 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் இருந்தன. அந்த சமயத்தில் சென்னையிலேயே 25 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருந்தது. சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் அதிகப்படியான கொரோனா பாதிப்புகள் இருந்ததைக் கண்டு, ஈரோடு மக்கள் மிரண்டுபோய்க் கிடந்தனர்.
ஏப்ரல் 2-ம் தேதி வரை ஈரோட்டில் 32 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு 6 நாள்களாக ஈரோட்டில் புதிதாகக் கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் இல்லை. கடந்த 6 நாள்களாகக் கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் இல்லாததால் நிம்மதியாய் இருந்த ஈரோடு மக்கள், இன்றைய அறிவிப்பைக்கண்டு அதிர்ந்துகிடக்கின்றனர். ஈரோட்டில் இன்றைக்கு மட்டும் 26 பேருக்குக் கொரோனா பாசிட்டிவ் என்கின்ற ரிசல்ட் வந்திருக்கிறது. ஏற்கெனவே ஈரோட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள்தான் இந்த 26 பேர் என்று சொல்லப்படுகிறது.
இதனால் ஈரோட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்றுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 8-வது இடத்தில் இருந்த ஈரோடு, இன்றைக்கு 3-வது இடத்திற்கு வந்திருக்கிறது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள். ஈரோடு பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பு நடவடிக்கையாக தற்போதுவரை ஈரோட்டில் 33,330 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,806 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கலெக்டர், எஸ்.பி, மாநகராட்சி கமிஷனர் என அதிகாரிகள் பலரும் களத்தில் இறங்கி பம்பரமாகப் பணியாற்றி வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
#GameCorner
கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.