உட்கார்ந்த இடத்தில் வேலை என்றாலும், அலுவலகம் சென்று வருவதற்கான அடிப்படை உடல் இயக்கத்துக்கும் இப்போது வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

வீட்டிலிருந்தே வேலை என்பதால், கூடுதலாக உட்கார்ந்த இடத்திலேயே நொறுக்குத் தீனிகளை மென்றுகொண்டு வேலை செய்வது உடலின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதுடன் உடல் எடை கூடவும் வழிவகுக்கும்
இதைத் தவிர்க்க அவ்வப்போது சிறுசிறு இடைவெளி எடுத்துக்கொண்டு, சிறு சிறு வார்ம் அப் பயிற்சிகள், எளிய உடற்பயிற்சிகள் குறைந்தபட்சம் வீட்டிலேயே நடப்பது போன்றவற்றைக் கடைப்பிடிப்பது அவசியம்.

“உடல் இயக்கத்தோடு, சரியான இடைவேளையில் சமச்சீர் உணவு எடுத்துக்கொள்வது அவசியம். அதேபோல் தேவையற்ற நொறுக்குத் தீனிகளுக்குத் தடா போட்டால் உடல் எடை கூடுவதிலிருந்து தப்பிக்கலாம்” எனும் டயட்டீஷியன் கோவர்தனி, உடல் எடை கூடாமல் இருக்க உதவும் உணவுமுறை குறித்து விவரிக்கிறார்.
உடல் பருமனைத் தவிர்க்கும் உணவுகள்

காய்கறிகள்
கீரை வகைகள்
தோல் சீவாத பழங்கள்
கொழுப்பு நீக்கிய பால் மற்றும் பால் உணவுகள்.
முழுத் தானியங்கள்
பயறு வகைகள்
சிறுதானியங்கள்
ஓட்ஸ்பார்லி
மீன்
முட்டையின் வெள்ளைக்கரு
தோல் நீக்கிய கோழி கறி
தவிர்க்க வேண்டிய உணவுகள்

க்ரீம்
சீஸ்
வெண்ணெய்
நெய்
கொழுப்புள்ள இறைச்சி
எண்ணெயில் பொரித்த உணவுகள்
சர்க்கரை
குளிர்பானங்கள்
அளவுடன் சாப்பிடவேண்டிய உணவுகள்

கிழங்கு வகைகள்
முந்திரி
இனிப்புகள்
கேக்
சாக்லேட்
ஜாம்
ஐஸ்க்ரீம்
தேங்காய்
சமையல் எண்ணெய்
(ஒருவருக்கு, ஒரு நாளைக்கு 4 முதல் 5 டீஸ்பூன்வரை).
இவற்றில் கவனம் ப்ளீஸ்
அதிக கொழுப்பு மற்றும் கலோரி அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
கொழுப்பு நீக்கிய பால், பால் பொருள்கள், நட்ஸ், பயறு வகைகள், முட்டை, மீன், கொழுப்பு நீக்கிய இறைச்சி போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.

காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிடவேண்டும்.
போதுமான அளவுக்குத் தண்ணீர் அருந்துவது அவசியம்.
அப்பளம், ஊறுகாய் போன்ற அதிக உப்புள்ள உணவுகளை அளவாக எடுத்துக்கொள்லவும்.
மூன்று வேளையும் தவறாமல் சாப்பிடவேண்டும். அதேநேரம் அளவாகச் சாப்பிட வேண்டும்.
உணவுப்பட்டியல்
காலை 6 மணி
கொழுப்பு இல்லாத பால்/ கிரீன் டீ – 100ml
காலை 8 மணி
இட்லி – 3/ தோசை- 3/ சப்பாத்தி- 2 முதல் 3 வரை/கோதுமை உப்புமா- 1 கப்
சாம்பார் சட்னி – 50 கிராம்

காலை 11 மணி
காய்கறி சூப்- 100 மி.லி / காய்கறி சாலட்- 1 கப்/ பழ சாலட்- 1 கப்
மோர் – 1 கப்/ இளநீர் – 100 மி.லி
Also Read: வெட்டிவேர், புதினா, மாதுளை… எளிய, இனிய கோடைக்கால பானகங்கள், பானியங்கள் தயாரிப்பு முறைகள்
மதியம் 1 மணி
சாதம் – 1 கப்/ காய்கறி அல்லது கீரை – 1 கப்
சாம்பார்,ரசம்- தலா 75 மி.லி
தயிர் 50 மி.லி
மீன்/கோழிக்கறி – 2 துண்டுகள்
அவித்த முட்டையின் வெள்ளைக்கரு – 1

மாலை 4 மணி
கொழுப்பு இல்லாத பால்/ டீ/ காபி – 100 மி.லி
கோதுமை பிரெட் – 2 ஸ்லைஸ்/ பிஸ்கட் 2 முதல் 3வரை
சுண்டல் – 75 கிராம்

இரவு 8 மணி
இட்லி – 3/ தோசை- 2 முதல் 3வரை / சப்பாத்தி- 2 முதல் 3வரை / கோதுமை உப்புமா- 1 கப்
சாம்பார் சட்னி – 50 கிராம்.
இரவு 10 மணி
பால் – 100 மி.லி
Also Read: வீட்டிலிருந்தபடியே வேலை… ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க 10 வழிகள்! #VikatanPhotoCards