பூமியின் துணைக்கோளான நிலா, வழக்கத்தை விட பூமிக்கு அருகில் வந்த அதிசய நிகழ்வு வானில் அரங்கேறியது. சூப்பர் மூன் என்றழைக்கப்படும் இந்நிகழ்வு, நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை மேலும் அழகாக்கியது.
பூமியின் துணைக்கோளான நிலா, பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அவ்வாறு வரும்போது, ஒரு புள்ளியில் மிக அருகிலும், ஒரு புள்ளியில் நீண்ட தொலைவிலும், நிலாவும், பூமியும் சந்தித்துக் கொள்ளும். அன்றைய தினம் பவுர்ணமியாக இருந்தால், நிலா வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இந்நிகழ்வே SUPER MOON என்றும் PINK MOON என்றும் அழைக்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதாக ஒருவர் கைது
இந்த வானியல் அதிசயம், நேற்று மாலை 6.30 மணிக்குத் தொடங்கி, இன்று காலை 8 மணி வரை நிகழ்ந்தது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் , இந்நிகழ்வினைக் காண அறிவியல் மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், SUPER MOON நிகழ்வை வெறு கண்களாலேயே காணலாம் என்பதால், மக்கள் அதனை வீடுகளில் இருந்தே கண்டு ரசித்தனர்.
ஊரடங்கு உத்தரவால் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, இந்த வானியல் நிகழ்வு ஒரு நல்வாய்ப்பாய் அமைந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM