அரக்கோணம் அருகே பூச்சி மருந்து கலந்த போண்டா சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடைக்கு சென்று போண்டா மாவும், செடிகளுக்கு அடிக்க பூச்சி மருந்தும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

K.Karthik Raja's - KKR Whatsapp Collections : கோதுமை ...

கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக ரயில்பெட்டிகளா? – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி லட்சுமி  தெரியாமல் பூச்சி மருந்து மற்றும் போண்டா மாவு கலந்து போண்டா சுட்டதாக தெரிகிறது. இதையறியாமல் பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி, மருமகள் பாரதி ஆகியோர் போண்டாவை சூடாக சாப்பிட்டுள்ளனர். பின்னர் வெளியே சென்றிருந்த மகன் சுகுமார் தனக்கு போண்டா வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அப்போது போண்டாவில் ஏதோ வாடை வருவதையறிந்து கிச்சனுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பூச்சி மருந்தும் போண்டா மாவும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியுற்ற சுகுமார் அனைவரையும் அழைத்துக்கொண்டு சோளிங்கர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அது ஒன்றும் செய்யாது, ஆகவே நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் என அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.

மாமனார் வாங்கி வந்த மாவு.. பூச்சி ...

ஃபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதாக ஒருவர் கைது

வீட்டிற்கு வந்த நான்கு பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட வாகனம் மூலமாக சென்னை தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு மருமகள் பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி, மகன் சுகுமார் ஆகியோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரதி மற்றும் சுகுமாருக்கு திருமணம் ஆகி இன்னும் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.