நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் உயிரிழப்பு தொடர்பான தகவல்கலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியிட்டது. அந்தத் தரவுகளில், கொரோனா நோய்த் தொற்றால் 4 ஆயிரத்து 67 பேர் பாதிக்கப்பட்டு, 109 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் 2.7 விழுக்காடு ஆக உள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தின்படி, 40 வயதுக்கு குறைவானவர்கள் ஆயிரத்து 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் இறப்பு விகிதமானது 0.4 சதவிகிதமாகும். 40 வயதில் இருந்து 60 வயது உடையவர்களில், 1,383 பேர் பாதிக்கப்பட்டு, 33 பேர் மரணமடைந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.4 விழுக்காடாகும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 773 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆகவும் உள்ளது. இதன் இறப்பு விகிதம் 8.9 சதவிகிதமாகும்.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிகம் உயிரிழப்போர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே என்பது தெரியவருகிறது. இதுதவிர, பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 67 பேரில், மூவாயிரத்து 91 பேர் ஆண்கள். இதில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடைய சதவிகிதம் 2.6 ஆகும். 976 பெண்கள் பாதிக்கப்பட்டு, 29 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதமானது 3 விழுக்காடாக உள்ளது. இதன்படி, கொரோனாவுக்கு அதிகம் உயிரிழப்பது பெண்கள் என்பதும் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
“தோனி இப்போது அதனை விளையாடுவதில்லை” தீபக் சாஹர் !
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM