மதுரை அருகே மைனர் பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்த போலீசாருக்கு தகவல் கொடுத்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சிந்தாமணி சாலை, கண்ணன் காலனியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது. இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகிலுள்ள ராஜாமன் நகரில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே ராமமூர்த்தியின் பக்கத்து வீட்டில் உள்ள மைனர் பெண்ணுக்கும் விஜயகுமார் என்ற இளைஞருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுகுறித்து ராமமூர்த்தி போலீசாருக்கு தகவல் கொடுத்து தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமாரும் அவரது உறவினர்களும் ராமமூர்த்தி மீது பகையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

காரைக்குடி அருகே வாலிபர் வெட்டிக் ...

ஃபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதாக ஒருவர் கைது

இந்நிலையில், நேற்று ராமமூர்த்தி அவரது பெற்றோரை பார்க்க ராஜாம்மன் நகரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், தந்தை நல்லுசாமி தனது இருச்சக்கர வாகனத்தில் ராமமூர்த்தியை அவரது வீட்டில் விட சென்றுள்ளார். அப்போது விஜயகுமாரும் அவரது உறவினர்களும் நல்லுசாமியின் வாகனத்தை வழிமறித்தனர். இதைப்பார்த்த ராமமூர்த்தி அங்கிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ராமமூர்த்தியை சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். தந்தை நல்லுசாமி ராமமூர்த்தியை காப்பாற்ற முயன்றார். ஆனால் படுகாயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மாப்பிள்ளை விஜயக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் ரஞ்சித், கருப்புராஜா, மணிகண்டன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.