கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நபர் விழுப்புரம் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6ஆம் தேதி ஒரு நபர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த அந்த நபருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக தெரிகிறது. இந்த தகவல் விழுப்புரம் மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.
சென்னையில் மட்டும் 156 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை ?
முன்னதாக, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM