குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தியாவில் மெல்லத் தொடங்கிய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் என அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா,தமிழ்நாடு,டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தினம்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குஜராத் மாநிலத்தின் ஜாம்நபர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 14 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 5ஆம் உறுதியானது. இதனையடுத்து ஜாம்நபர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளன. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அக்குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் மிகக் குறைந்த வயதுடையவர் இந்த குழந்தை தான். குழந்தையின் பெற்றோர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது அவர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM