தெலங்கானாவில் பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் மெல்லத் தொடங்கிய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் என அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா,தமிழ்நாடு,டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தினம்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் 69 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 63 பேருக்கும், டெல்லியில் 51 பேருக்கும் தெலங்கானாவில் 40 பேருக்கும் கொரோனா உறுதி ஆனது. இதில் தெலங்கானாவில் உறுதி செய்யப்பட்ட 40 பேரில் பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையும் ஒன்று. தெலங்கானாவில் தற்போது 404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன
மைனர் பெண்ணின் திருமணம் தடுத்து நிறுத்தம் : போலீசாருக்கு தகவல் கொடுத்தவர் வெட்டிக்கொலை…!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM