கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரூ.59 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இது குறித்து அண்மையில் ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி “பொது மக்கள் வழங்கும் சிறிய அளவிலான நிதி, பேரிடர் காலங்களில் பொதுமக்களைக் காப்பாற்ற உதவும். வளமான இந்தியாவை உருவாக்க வருங்கால சந்ததியினருக்கு இது உதவும். மக்கள் தாங்கள் விரும்பும் நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம். நீங்கள் அளிக்கும் நிதி எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளும் பேரிடருக்கு நிச்சயம் உதவும்” எனத் தெரிவித்திருந்தார்.
அஜித்தின் கொடை உள்ளத்தைப் பாராட்டி இந்திய அளவில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக்
இதனையடுத்து பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ரூ.59 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதில் ரூ. 35 லட்சத்தைப் பிரதமர் பொது நிவாரண நிதிக்கும் ரூ. 24 லட்சத்தை மஹாராஷ்ட்ரா நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார்.
“மக்கள் தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம்” – முதல்வர் பழனிசாமி !
இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதிக்கு முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.