கொரோனா வைரஸ் வளர்ச்சியை ஈவெர்மெக்டின் என்னும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து 48 மணி நேரத்தில் தடுத்திடும் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான கைய்லி வேக்ஸ்டாஃப், ஈவெர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து 48 மணி நேரத்தில் மனித உடம்பில் கொரோனா வளர்ச்சியை தடுக்கும் எனக் கூறியுள்ளார்.
“உயிர் போனால் மீட்க முடியுமா? ஊரடங்கை நீட்டியுங்கள்” – தெலங்கானா முதல்வர் கோரிக்கை
ஈவர்மெக்டின், FDA வால் அங்கீகரிக்கப்பட்ட மருந்து எனவும் கைய்லி தெரிவித்துள்ளார். ஆய்வகங்களில் மட்டுமே இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மனித உடம்பில் செலுத்தி பரிசோதனை செய்யலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
தங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் – ரஷ்யா
சார்ஸ், ஹெச்ஐவி உள்ளிட்ட சில தொற்றுகளுக்கு எதிராக ஈவர்மெக்டினைப் பயன்படுத்திய போது சிறப்பான முடிவுகள் கிடைத்ததாகவும் கைய்லி கூறியுள்ளார். ஈவர்மெக்டினை மிகச்சிறிய அளவில், அதாவது ஒரு dose அளவில் கொடுத்தால் கூட நல்ல முடிவுகளைக் காண முடியும் எனவும் கைய்லி வேக்ஸ்டாஃப் கூறியுள்ளார்.