”வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு” – குறும்படம் வெளியிட்ட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ்

இந்திய சினிமாவைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் பலர் இணைந்து கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நாடே வெறிச்சோடி உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சமூக விலகல் வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பலர் விழிப்புணர்வு இல்லாமல் வெளியில் நடமாடி வருகின்றனர். அரசும், பிரபலங்களும் மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

image

இந்நிலையில் இந்திய சினிமாவைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் பலர் இணைந்து கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த குறும்படத்திற்கு ஃபேமிலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் உடல் நலத்தை பேணுவது, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த குறும்படத்தில் இடம்பெற்றுள்ளன.

காவலர்களும் மனிதர்கள் தானே… – முதலமைச்சர் பழனிசாமி

image

இந்தப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மம்முட்டி,மோகன்லால், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM