பழனி பேருந்து நிலையத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கேட்பாரற்று கிடந்த வயதான இருவரை சுகாதாரத் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றனர்.
பழனியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவர்கள் பரிசோதனைக்கு முன்னர் காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு
சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள பழனி பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு
படுத்துக் கிடந்தார்.
தங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் – ரஷ்யா
பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு முதியவரும் மூச்சுத் திணறலுடன் அவதியடைந்து வந்தார். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற
அச்சத்தில் அப்பகுதி மக்கள் யாரும் அவர்களது அருகில் சென்று உதவ முன்வரவில்லை.
“உயிர் போனால் மீட்க முடியுமா? ஊரடங்கை நீட்டியுங்கள்” – தெலங்கானா முதல்வர் கோரிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சுகாதாரத் துறையினர் இருவரையும் பரிசோதனை செய்ததில் இருவருக்கும் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. உடனடியாக
அவர்கள் இருவரும் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM