இரட்டை செல்ஃபி கேமராக்களுடன் விவோ நிறுவனத்தின் ‘வி19’ மாடல் செல்போன் வெளியிடப்பட்டுள்ளது.

சீன நிறுவனமான விவோ நிறுவனம் தங்கள் ‘வி’ சீரியஸ் ஸ்மார்ட்போன்களில் அடுத்தடுத்த அப்டேட் மாடல்களை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் புதிய மாடலான விவோ ‘வி19’ வெளியிடபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக இரட்டை செல்ஃபி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி, 32 எம்பி (மெகா பிக்ஸல்) மற்றும் 8 எம்பி என இரட்டை செல்ஃபி கேமராக்கள் உள்ளன.

image

அத்துடன் பின்புறத்தில் 48 எம்பி மெயின் கேமராவுடன், 8 எம்பி அல்ட்ரா-ஒய்டு மற்றும் 2 எம்பி-ல் ஒரு டெஃப் மற்றும் ஒரு மெக்ரோ லென்ஸ் கேமராக்கள் உள்ளன. இதுதவிர 8 எம்பி ரேம் உடன், 128 ஜிபி அல்லது 256 ஜிபி என இரண்டு வகை இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்டதாக இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது. 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளேவுடன், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது.

image

குவால்கம் ஸ்நாப்ட்ராகன் 712 பிராஸருடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த போன், கறுப்பு மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 33 வாட் அதிவேக சார்ஜ் வசதி கொண்ட 4,500 எம்.ஏ.எச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேவுடன் ஃபிங்கர் பிரிண்ட் சென்ஸார் வசதியும் இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

வாடிக்கையாளர்களே உஷார்: இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவிப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடி!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.