தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிவேகமாக பரவியுள்ளது. இதுவரை 621 பேர் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியாக பார்க்கும்போது, சென்னை – 110, கோவை – 59, திண்டுக்கல் – 45, நெல்லை – 38, ஈரோடு – 32, திருச்சி – 30, நாமக்கல் – 28, ராணிப்பேட்டை – 25, செங்கல்பட்டு – 24, கரூர், தேனி (தலா) – 23, மதுரை – 19 பேர் என பாதிக்கப்பட்டுள்ளனர்.

image

மேலும், விழுப்புரம் – 16, கடலூர் – 13, சேலம், திருவள்ளூர், திருவாரூர் (தலா) – 12, நாகை, தூத்துக்குடி, விருதுநகர் (தலா) – 11, திருவண்ணாமலை – 9, தஞ்சாவூர் – 8, திருப்பூர் – 7, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் (தலா) – 6, சிவகங்கை, வேலூர் (தலா) – 5, நீலகிரி – 4, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் (தலா) – 2, அரியலூர், பெரம்பூர் (தலா) – 1 என கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

image

அத்துடன் தமிழகத்தில் இதுவரை 2,10,538 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று வரை 90,824 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19,060 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர 72,791 பேர் தனிமை கண்காணிப்பில் உள்ளதாகவும், அரசு தனிமை கண்காணிப்பில் 205 பேர் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

image

தமிழகத்தை பொறுத்தவரை 11 அரசு மையங்கள் மற்றும் 7 தனியார் மையங்கள் என மொத்தம் 19 கொரோனா பரிசோதனை மையங்கள் இருப்பதாகவும், இதுவரை அங்கு 5,015 ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 621 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் 295 பரிசோதனை முடிவுகள் வெளியாகிவுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன்பெற்ற 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 3.371 செயற்கை சுவாசக்கருவிகள் உள்ளதாகவும், 22,049 தனிமை படுக்கைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

அம்பானி முதல் அதானி வரை … கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.