ஊரடங்கு காலத்தில் மருத்துவமனை செல்ல சிரமப்படும் கர்ப்பிணிகளுக்கு உதவுவதையே முழுநேரப்பணியாக சென்னையில் ஒரு நபர் செய்து வருகிறார்.
ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவிகள் சரியான நேரத்தில் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு சேவை செய்வதையே பணியாக ஆவடியைச் சேர்ந்த லியோ ஆகாஷ் ராஜ் என்பவர் செய்து வருகிறார். இவர் தாம்பரத்தில் “பிரிட்டி லில் ஹாட்ஸ்” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இக்கட்டான காலகட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இவர் இலவசமாக போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறார். தன்னுடைய காரையும் நண்பர் பென்னி என்பவரது காரையும் கர்ப்பிணிகளுக்காக இலவச போக்குவரத்து சேவைக்கு சென்னை முழுவதும் பயன்படுத்தி வருகிறார்.
9-வது மாத கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமே இந்த உதவியை லியோ ஆகாஷ் ராஜ் செய்து வருகிறார். 13 நாட்களில் 43 கர்ப்பிணி பெண்களுக்கு இவர் உதவிதியுள்ளார். இவரது உதவி மூலம் 23 குழந்தைகள் பிறந்துள்ளன. கர்ப்பிணிகளுக்கான இலவச ஆம்புலன்ஸ் வாகனம் என்ற நோக்கத்தோடு சேவை செய்வதாக அவர் கூறியுள்ளார். இதுபோன்ற இலவச போக்குவரத்து சேவையை அரசே செய்தால் உதவியாக இருக்கும் என்பது கர்ப்பிணி பெண்களின் கோரிக்கையாக உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு 24 மணி நேரமும் உதவ தயார் – தமிழக அரசு