கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில், நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, ஒரேநாளில் 86 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது.
Also Read: `தனிமைப்படுத்தப்பட்ட 300 செவிலியர்கள்; 40 பேருக்குக் கொரோனா’ – சோகத்தில் மும்பை மருத்துவமனை
ஸ்பெயினில் இருந்து திரும்பிய மாணவிக்குத்தான் கோவையில் முதன்முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 28 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், நேற்று ஒரேநாளில் கோவையில் மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: பெண் டாக்டர் மற்றும் அவரது 10 மாத குழந்தைக்கு கொரோனா.. கோவையில் ஒரே நாளில் 4 பேர் பாதிப்பு!
உறுதிசெய்யப்பட்டுள்ள அனைவரும், டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள். இவர்களில் 23 பேர் கோவை மாநகராட்சி எல்லைகளில் வசிப்பவர்கள், 5 பேர் அன்னூர் மற்றும் ஒருவர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். இதன்மூலம், கோவையில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.