தமிழக தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-யை நெருங்கி வருகிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 58 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. நெல்லையில் 38 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டையில் தலா 25 பேரும், தேனி மற்றும் கரூரில் தலா 23 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீப ஒளியில் மிளிர்ந்த தேசிய தலைவர்கள்…!
செங்கல்பட்டில் 22 பேர், மதுரையில் 19 பேர், திருச்சியில் 17 பேர், விழுப்புரத்தில் 15 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திருவாரூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 12 பேருக்கும், விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா 11 பேருக்கும், திருப்பத்தூர், கடலூரில் தலா 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 8 பேர், கன்னியாகுமரியில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை, வேலுர், தஞ்சாவூரில் தலா 5 பேரும், காஞ்சிபுரம், நீலகிரியில் தலா 4 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் தீ விபத்து..! பட்டாசு வெடித்ததால் வந்த வினை?
குறைந்தபட்சமாக திருப்பூரில் மூன்று பேர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் தலா இரண்டு பேர், பெரம்பலூரில் ஒருவர் என 32 மாவட்டங்களில் மொத்தம் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இதுவரை கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM