டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு கும்பகோணம் திரும்பிய 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதிகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து கும்பகோணம் திரும்பிய 42 வயது நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 6 பேர் தஞ்சை மருத்துவமனையில் பரிசோதனைக்காக வந்தனர்.
இவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரும் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM