இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 100-ஐ தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 45 பேர்உயிரிழந்துள்ள நிலையில், 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 571 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 8 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
டெல்லியில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு 503 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். தொடக்கத்தில் பாதிப்பு அதிகம் இருந்த கேரளாவில், தற்போது நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 314 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சென்னையில் தீ விபத்து..! பட்டாசு வெடித்ததால் வந்த வினை?
அதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 276 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தெலங்கானாவில் 272 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 33 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 11 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். ஒப்பீட்டளவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் என்பது வேகமாக உள்ளது. நாடுமுழுவதும் 4 ஆயிரத்து 111 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 126 பேர் உயிரிழந்துள்ளனர். 315 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.