தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571இல் இருந்து 621 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் 19,060 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும் 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும், “தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்” என்றும் அவர் கூறினார்.
#BREAKING தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது https://t.co/DTg6oS7sXS
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 6, 2020