கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் ரகளைகள் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிள்களுக்கு பதிலாக இப்போது அச்சத்துடன் கொரோனா அப்டேட்ஸ்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் எல்லோரும் வீடுகளுக்குள்ளே முடக்கியிருக்கிறார்கள். புத்தக வாசிப்பு.. கிராப்ட் வொர்க்ஸ்.. ஓவியம்…. என சிலர் பொழுதைக் கழித்தாலும். வீடுகளில் டிவி ரிமோட்களுக்கும், மொபைல்போன்களுக்குமான சண்டைகள் ஓய்ந்தபாடில்லை.

ரிமோட்

நெட்ப்ளிக்ஸ், அமேசான்களுக்கு பல இல்லத்தரசிகள் அப்டேட் ஆகிவிட்டார்கள். இருந்தாலும் பொதிகை முதல் தனியார் தொலைக்காட்சிகள் வரை பழைய ஹிட் சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பத் தொடங்கி விட்டார்கள். என்ன இருந்தாலும் ரீவைன்ட் மோடுக்கு முன்னோடிகள் ஸ்போர்ட்ஸ் சேனல்கள்தான். ஸ்போர்ட்ஸ் சேனல்களில் எப்போதும் எதாவது ஒரு பழைய மேட்ச் ஓடிக்கொண்டே இருக்கும். பழைய மேட்ச்களை பார்ப்பதில் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு ஒரு அலாதி இன்பம். கிரிக்கெட் ரசிகர்களைக் கேட்கவே வேண்டாம். மேட்ச் ரிசல்ட் தெரிந்திருந்தாலும் ஃபேவரைட் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்களின் இளமைக்கால பாய்ச்சல்களை பார்ப்பதற்காகவே ஆஜராகிவிடுவார்கள்.

கிரிக்கெட் உலகில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த விஷயங்களில் ஒன்று தோனி ரிட்டயர்ட்மென்ட்தான். இந்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவதை பொறுத்து அவரது எதிர்காலம் இருக்கும் என்று பேசப்பட்டு வந்தது. ஊரடங்கு உத்தரவால் ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தோனி இந்திய அணிக்கு வந்த சமயத்தில் கீப்பிங்கில் பெரிய மாயாஜாலம் எல்லாம் செய்யவில்லை. ஆரம்பக்கால தோனி ஒரு அதிரடி ஆட்டக்காரராகவே அறியப்பட்டார். அதன்பின் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டவர் இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். கீப்பிங்கில் தோனி பிறகான வெற்றிடத்தை யார் நிரப்பப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்பும் வகையில் கீப்பிங்கில் பல சாகசங்களை செய்துவிட்டார். மின்னல் வேக ஸ்டெம்பிங்கில் இப்போதும் மிரட்டுகிறார்.

தோனி

2005-ம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதற்காக தோனியை வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா வசைபாடும் வீடியோ இணையத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. சுமார் 15 வருடங்களுக்கு பிறகு இந்த வீடியோ குறித்து நெஹ்ரா மனம் திறந்துள்ளார்.

“விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த தொடரின் இரண்டாவது போட்டி அது. நான் கோபமாக கத்தும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. தோனி கீப்பர்; முதல் ஸ்லிப்பில் ராகுல் டிராவிட் நிற்பார். அப்ஃரிடி அடித்த பந்து பேட்டில் எட்ஜாகி இருவருக்கும் இடையில் செல்லும். அந்தப் பந்தை கேட்ச் செய்யாததால் நான் கோபமாகக் கத்தினேன். மக்கள் இதனை விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டி என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இது அகமதாபாத்தில் நடந்த 4-வது போட்டிஅந்த சம்பவத்தை நினைத்து இப்போது நான் பெருமைப்படவில்லை.

நெஹ்ரா

இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் என்றாலே ஒரு பரபரப்பு இருக்கும். அந்த பந்துக்கு முந்தைய பந்தை தான் அஃப்ரிடி சிக்ஸர் விளாசினார். அதற்கு அடுத்தபந்திலே விக்கெட் எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தும் அதனை வீணடித்துவிட்டனர். அந்த ஆத்திரத்தில் தான் கோபமாக கத்தினேன். அந்த ஒரு சம்பவம்தான், நான் என் நிதானத்தை இழந்து கத்தியது. ஆனாலும் தோனி, டிராவிட் இருவரும் என்னிடம் சகஜமாகதான் பேசினார்கள். அதனால் நான் செய்தது நியாயமாகிவிடாது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலானது நான் காரணமல்ல தோனி. தோனி அதில் இருப்பதால் தான் வைரலானது.

விராட் கோலி சிறுவனாக இருக்கும்போது நான் அவருக்கும் பரிசு வழங்கும் புகைப்படம் அதிகம் பேசப்பட்டது. அதற்கு காரணம் விராட் கோலிதான் நான் இல்லை. ஒருவேளை சில வருடங்கள் கழித்து என் பிள்ளைகள் இந்த வீடியோவை காண நேரிடும். நான் ஏன் அவ்வாறு நடந்துக்கொண்டேன் என அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருக்கும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.