திருமணமாகி 51 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த வயதான தம்பதி 6 நிமிடங்கள் இடைவெளியில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி ஸ்டூவர்ட் பேக்கர், 74 மற்றும் அட்ரியன் பேக்கர், 72. இவர்களுக்கு 51 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமாகி, இருவரும் இறக்கும் வரை ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ‘பிரிக்க முடியாத ஜோடி’ என்று அவர்களது குடும்பத்தினரால் அழைக்கப்பட்டனர்.
‘ஒரு வாரத்திற்குள் 50 ஆயிரம் பேருக்கு இலவச உணவு’ – சாதித்துக் காட்டிய மஹிந்திரா
இந்நிலையில், கடந்த வாரம், அவர்கள் இருவரும் 6 நிமிட இடைவெளியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இதுகுறித்து அவர்களது மகன் பட்டி பக்கர் கூறுகையில், “இந்த இறப்பு துர்திஷ்டவசமானது. எனது பெற்றோர் மார்ச் நடுப்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உணர்ந்தனர். ஆனால் வீட்டிலேயே தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சில நாட்களுக்கு பிறகு தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அம்மாவுக்கு காய்ச்சல் இல்லை. அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. எங்களது குடும்பம் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் தந்தைக்கு கொரோனா என மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது.
In loving memory of my mom and dad- please make the tough and right choice and help stop the spreading of this virus. pic.twitter.com/FqVEWjdscq
— Buddy Baker (@ESG_Baker) March 31, 2020
குடும்பத்தினர் அந்தச் செய்தியால் வருத்தப்படுத்தவில்லை, ஆனால் அவர்கள் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனைக்குப் பிறகு, அவரது ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்களின் உறுப்புகள் செயலிழந்ததால், குடும்பத்தினர் பெற்றோரை நல்வாழ்வு கவனிப்புக்கு மாற்ற முடிவு செய்தனர்.
அங்கு அவர்கள் இருவரும் ஒரே அறைக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் வசதியாக இருக்க வென்டிலேட்டர்களை கழற்றினர். தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்து சில நிமிடங்களில் உயிரிழந்தனர். மக்கள் தொற்றுநோயை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.