மஹிந்திரா  நிறுவனம் தாங்கள் திறந்துள்ள சமையலறையின் மூலம் ஒரு வாரத்திற்குள் 50,000 நபர்களுக்கு உணவு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து  உட்பட அனைத்து முடக்கப்பட்டுள்ளன. மாநிலங்களிடையேயான உறவுகள் முழுக்க துண்டிக்கப்பட்டுள்ளன. கூலித் தொழிலாளர்கள் பலர் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆகவே பலர் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.
 
stdt4d94
 
இந்நிலை மஹிந்திரா  நிறுவனம்  தங்களது  சார்பில்  இந்தியா முழுவதும் 10 இடங்களில் சமூக சமையலறைகளைத் திறப்பதாக அறிவித்தது.  மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி., பவன் கோயங்கா இன்று சமூக ஊடக பதிவின் மூலம் தங்களது நிறுவனம் ஒரு வாரத்திற்குள் 50,000 உணவு பொட்டலங்களை வழங்கி உள்ளதாகத்  தெரிவித்துள்ளார்.  நிறுவனம் குடிபெயர்ந்த மற்றும் தினசரி கூலிக் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி  உதவி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
 இந்தக் கடினமான காலங்களில் உணவு தேவைப்படுபவர்களுக்குச் சமையல் செய்வதற்கான சமூக சமையலறைக்கான உள்கட்டமைப்பை வழங்க உள்ளதாகவும்  பவன் கோயங்கா அவரது பதிவில் தெரிவித்துள்ளார். இந்தச்  சமையலறைகள் மூலம் ஒரு நாளில் மட்டும்  10,000 உணவுப் பொட்டலங்களை தயாரித்து வழங்கி மஹிந்திரா உதவி உள்ளது.  அதேசமயம், இந்தக் கொடிய வைரஸ் நாட்டில் பரவாமல் தடுக்க இதர நடவடிக்கைகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 
 
Coronavirus lockdown: Indian Railways, airlines begin bookings ...
 
மஹிந்திரா ஏற்கனவே கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும்,மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கான  முகக்கவசத்தை தயாரிப்பதற்காக வேலைகளை மும்பை உள்ள காண்டிவலி பகுதியில் தொடங்கியுள்ளது. உண்மையில், முதல் 50,000 முகக்கவசங்கள் இந்தியா முழுவதும் இலவசமாக வழங்கப்படும் என்று கோயங்கா சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.