போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்து குடித்தவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வணிக வளாகங்கள், மதுக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அன்றாடம் பிழைப்பு நடத்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதுக் கடைகள் மூடப்பட்டதால், தினமும் மது அருந்தும் மதுப் பிரியர்கள் மது இல்லாமால் கடுமையான மனச்சிக்கலுக்கு உள்ளாகி வருவதாக சொல்லப்படுகிறது.
கொரோனா கணக்கெடுப்புக்குச் சென்ற பெண் ஊழியரிடம் தகராறு: ஒருவர் கைது
நாங்க போடுறதுதான் மேக்கப் – சூரிக்கு மேக்கப் போட்ட அவரது குழந்தைகள்!
அந்தவகையில் செங்கல்பட்டில், போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்து குடித்த சிவராமன் என்பவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக புதுக்கோட்டையில் குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த இருவர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.