டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய தேனியைச் சேர்ந்த 24 நபர்களில் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கொரோனா பாசிட்டிவ் நபரின் மனைவி (வயது 53) மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டத்திலிருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட சுகாதாரத்துறை, கடந்த மார்ச் 31-ம் தேதி, தேனியின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 24 நபர்களை, கானாவிலக்கு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றது. அனைவரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 21 நபர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் முடிவுகள் வரவே, 21 நபர்களும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

தொடர்ந்து, 21 நபர்கள் வசித்துவந்த ஐந்து பகுதிகள், மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, சுகாதாரத்துறை பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபரின் மனைவி, இன்று மூச்சுத்திணறல் காரணமாக, சிகிச்சை பலனின்றி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Theni GH

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தேனியைச் சேர்ந்த கோவிட்-19 பாசிட்டிவ் நபரின் மனைவி (வயது 53) மூச்சுத்திணறல் அதிகமாகி, இன்று பிற்பகல் 2.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

உயிரிழந்த பெண் எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா போன்ற விவரங்களை சுகாதாரத்துறை வெளியிடவில்லை. எனினும் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், தேனியில் பலியான பெண்ணுக்கும் கொரோனா இருந்ததை உறுதி செய்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.