கொரோனா அச்சத்தால் மக்களின் பொழுதுபோக்கு அம்சமான திரையரங்குகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. இந்த நிலையில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்களுக்கு கிளாசிக் ஹிட் படங்கள், நாஸ்டால்ஜியா சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் எனப் பலவற்றை மறு ஒளிபரப்பு செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றன டிவி சேனல்கள்.

தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக, மக்களின் கவனம் அதிக அளவு OTT பக்கம் திரும்பியிருக்கிறது. இதுவரை பார்க்காத படங்கள், பிறகு பார்க்கலாம் என விட்டிருந்த படங்கள், வெப்சீரிஸ் எனக் கடந்த க்வாரன்டீன் நாள்களில் அதிக அளவு மக்கள் OTT பக்கம் வந்திருக்கிறார்கள் என்கின்றன சமீபத்திய சர்வேக்கள்.

web series

இந்த க்வாரன்டீன் நாள்களைக் கழிக்க முன்னணி OTT தளங்களில் பார்க்க வேண்டிய 10 வெப்சீரிஸ்களின் பட்டியல்.

MoneyHeist – Netflix

Money Heist

Also Read: தங்க வேட்டை, புரட்சி, போலீஸ் அராஜகம்… எப்படி இருக்கிறது #MoneyHeist4?

ஸ்பானிஷ் க்ரைம் ட்ராமா தொடராக 2017-ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த தொடர் ‘Money Heist’. ஸ்பெயினில் இருக்கும் ராயல் மின்ட் என்கிற இடத்தை ஆக்கிரமித்து நோட்டுகளை அச்சடித்துக் கொள்ளையடிக்கத் திட்டமிடும் கும்பலுக்கும் போலீஸுக்கும் நடக்கும் டாம் அண்ட் ஜெர்ரிதான் இந்த சீரிஸின் ஒன்லைன்.

சமீபத்தில் திருச்சியில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கு இந்த சீரிஸ்தான் இன்ஸ்பிரேஷன் என கொள்ளையடித்தவர்கள் சீரியஸ் ஸ்டேட்மென்ட் கொடுக்க, பட்டித்தொட்டியெங்கும் இன்னும் பலபேரைச் சென்றடைந்தது இந்த சீரிஸ். புரொஃபசர், நைரோபி, டோக்கியோ, இன்ஸ்பெக்டர் ரக்கீல் என இந்த சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்களிடையே அத்தனை பிரபலம். முதல் மூன்று சீசன்கள் வெளியான நிலையில் இதன் நான்காவது சீஸன் நேற்றுதான் வெளியானது.

Friends – Netfilx

Friends

அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு 80’ஸ் கிட்ஸ் நண்பர்களின் கதைதான் ஃப்ரெண்ட்ஸ். எல்லோரையும் கவர்ந்த இந்த சீரிஸானது 10 சீஸன்களாக வெளிவந்தது. தன்பால் ஈர்ப்பு, ஒருவருக்குப் பலருடன் ரிலேஷன்ஷிப், பிரேக்கப், டேட்டிங் என `ஃப்ரெண்ட்ஸ்’ சீரிஸ் உடைத்துப் பேசும் விஷயங்கள் ஏராளம்.

`உறவுகளுக்குள் எதையுமே எமோஷனலாக எடுத்துச் செல்லும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. இதையெல்லாம் சீரியஸாக எடுக்காமல் மனித இயல்பே அதுதான் எனப் புரிந்துகொள்ளுங்கள்’ என சியர்ஸ் சொல்கிறது இந்த சீரிஸ். 1994-ல் ஆரம்பித்து 2004 வரை அமெரிக்காவில் டிவி சீரியஸாக ஒளிபரப்பனாது. 25 ஆண்டுகள் கடந்தும் இந்த சீரிஸுக்கு இன்னும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இதன் ஹிட் சீக்ரெட்.

Sex education – Netfilx

Sex education

பிரிட்டிஷ் காமெடி ஜானரைச் சேர்ந்த வெப் சீரிஸ் செக்ஸ் எஜூகேஷன். செக்ஸ் தெரபிஸ்ட்டான அம்மாவுக்கும் அவரது பையனின் பள்ளி வாழ்க்கைக்கும் இடையில் சுழலும் கதைதான் இதன் ஒன்லைன். டிவி சீரியலாக ஹிட்டடித்த இதன் உரிமத்தை நெட்பிளிக்ஸ் கையில் எடுத்தது.

கடந்த ஜனவரி முதல் சீஸனும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2-வது சீஸனையும் வெளியிட்டது நெட்ஃப்ளிக்ஸ். முதல் இரண்டு சீஸனிலும் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களின் செக்ஸுவல் பிரச்னைகளையும் அவர்கள் அதைக் கையாளும் விதத்தையும் பேசியிருக்கும் இந்த சீரிஸ் ரசிகர்களிடையே அதிரிபுதிரி ஹிட்.

The family man – Amazon Prime

The Family Man

Also Read: கங்காருவின் கம்பேக்!

அமேசான் ப்ரைமில் ஆக்‌ஷன் – டிராமா ஜானரில் வெளிவந்த வெப் சீரிஸ், `தி ஃபேமிலிமேன்’. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த சீரிஸை, பாலிவுட் இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கியிருக்கின்றனர். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரவ் மனோஜ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த சீரியஸுக்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் தொடுக்கத் திட்டமிடும் ஐ.எஸ் அமைப்பின் திட்டத்தை, என்.ஐ.ஏ நிறுவனத்தின் சிறப்பு அதிகாரியான ஶ்ரீகாந்த் திவாரி (மனோஜ் பாஜ்பாய்) எப்படித் தகர்த்து, அதை முறியடிக்கிறார் என்பதே கதையின் ஒன் லைன். நாட்டுப் பிரச்னைகளைப் பேசிய அதே சமயம், குடும்பத்துக்குள் ஏற்படும் குழப்படிகளையும் நுட்பத்துடன் கையாண்டிருக்கிறது, `தி ஃபேமிலிமேன்’. டெல்லியை ஒழித்துக்கட்ட நச்சுக் காற்றை ஊருக்குள் பரப்ப முயலும் தீவிரவாதிகளின் திட்டத்தை எப்படித் தகர்கிறார் என்பதோடு, ஶ்ரீகாந்த் திவாரி தனது குடும்பப் பிரச்னைகளையும் எவ்வாறு தீர்க்கிறார் போன்ற கேள்விகளுக்கான விடையை 2-வது சீஸனில் எதிர்பார்க்கலாம். இந்த சீஸனில் சமந்தாவும் நடிக்கவிருக்கிறார்.

Queen – MX Player

Queen

Also Read: செர்னோபில் முதல் குயின் வரை… 2019-ல் கவனம் ஈர்த்த டாப் 10 வெப் சீரிஸ்! #VikatanRewind2019

தமிழகப் பெண் அரசியல் ஆளுமை ஒருவரின் வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, அதில் புனைவைச் சேர்த்து, கடந்த ஆண்டின் இறுதியில் எம்.எக்ஸ் ப்ளேயரில் வெளியான வெப் சீரிஸ், `குயின்’. 11 எபிசோடுகளைக்கொண்ட இந்த சீரிஸை கெளதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இயக்க, இந்திரஜித், ரம்யா கிருஷ்ணன், அனிகா, அஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.

திறமையான மாணவியான சக்தி, குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடரமுடியாமல் சினிமாவுக்குள் நுழைந்து, அரசியல் வரை சென்ற பயணத்தை முதல் சீஸன் சொல்லியிருக்கும். அதற்குப் பிறகான அரசியல் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் அடுத்த சீஸனில் பார்க்க, இந்த வருடம் ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Breaking Bad – Netflix

பிரேக்கிங் பேட்

அமெரிக்கன் வெஸ்டர்ன் க்ரைம் ட்ராமா சீரியஸாக 2008-ல் ஆரம்பித்து 2013 வரை ஒளிபரப்பான தொடர் பிரேக்கிங் பேட். ஹைஸ்கூல் ஒன்றில் வேதியியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் வால்டர் வொயிட் நுரையீரல் கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர்.

மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரான வால்டருக்கு நோய் வாதை, வாழ்க்கை குறித்தான அச்சம், இறப்பிற்குப் பிறகு தனது குடும்பத்துக்கான வருவாய் என எல்லாம் அவரை மிகுந்த மன அழுத்தத்திற்குத் தள்ள, வால்டரும் அவரது முன்னாள் மாணவரும் சேர்ந்து பணத்திற்காகச் செய்யும் கிரிமினல் வேலைகளே `பிரேக்கிங் பேட்’.

The End of the f***ing world – Netflix

The End of the f***ing world – Netflix

கிராஃபிக் நாவலாக வெளிவந்து ஹிட்டடிக்க அதைத் தொடர்ந்து வெப் சீரிஸாகவும் வெளிவந்து ஹிட்டடித்தது ‘The End of the f***ing world’. 17 வயதுச் சிறுவன் ஜேம்ஸ்தான் இந்த சீரிஸின் சைக்கோயிக் ஹீரோ.

சிறு வயதிலிருந்தே ஒருவித மன அழுத்தத்தால் செல்லப் பிராணிகளைக் கொன்று வரும் ஜேம்ஸுக்கு ஒரு கட்டத்தில் அந்த செய்கைப் போர் அடித்துவிட, அடுத்த நிலையாக மனிதர்களைக் கொல்ல முடிவெடுக்கிறான். இதற்கு முதல் டார்கெட்டாக அவனது வகுப்புத்தோழி அலீஸாவைத் தேர்ந்தெடுக்க, இதன் பின்னர்தான் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பது தெரிய வரும். ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேற, அதற்குப் பிறகான பயணம்தான் மொத்தக் கதையும். நடுநடுவில் சில டிவிஸ்ட் அண்ட் டேர்ன்கள் வைத்து சுவாரஸ்யம் சேர்த்திருப்பார்கள்.

13 Reasons why – Netflix

13 Reasons why – Netflix

அமெரிக்க எழுத்தாளரும் நாவலாசிரியருமான ஜெய் அஷர் எழுதிய 13 Reasons why என்கிற நாவல், டீன் ட்ராமா சீரிஸ் ஜானரில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பானது. ஒரே ஸ்கூலில் படித்துவரும் க்ளே ஜென்சனும், ஹன்னா பேக்கரும் டீனேஜ் நண்பர்கள். பள்ளியில் ஹன்னா பேக்கரைச் சுற்றி டீஸிங், ராகிங், காஸிப், பாலியல் துன்புறுத்தல் என இது மாதிரியான சில பிரச்னைகள் துரத்துவதோடு சில உடல்ரீதியிலான பிரச்னைகளும் இருக்கும். இதனால் தற்கொலை முயற்சி செய்கிறார்.

அதுவும் எதற்காகத் தற்கொலை செய்கிறேன் என்பதை 13 கேசட்டுகளில் பதிவு செய்து அதை க்ளேக்குக் கிடைக்கும்படி செய்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அதற்குப் பின் எதிர்பாரா சில டிவிஸ்டுகளோடு நகர்கிறது திரைக்கதை.

Stranger things – Netflix

Stranger things

நிகழ் உலகத்தைப் போலவே இணையொத்த இன்னோர் உலகமும் உள்ளது என்பதை ஏலியன் கலந்த சயின்ஸ் ஃபிக்‌ஷனில் சொல்லியிருக்கும் சீரிஸ்தான் Stranger things.

இதில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஜிம் ஹாப்பார் இறப்பதோடு முடியும் மூன்றாவது சீஸனின் முடிவுக்கு இன்னமும் டீகோடிங் செய்துகொண்டிருக்கிறார்கள் சிலர்.

Asur – Voot 

Asur

சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பிகளுக்கானது இந்த அசுர். வாரணாசியில் மதத்தின் பெயரால் நடக்கும் குற்றங்களை ஃபாரன்சிக் அதிகாரிகள் இருவரும் கண்டுபிடிப்பதுதான் `அசுர்’. அறிவியல், புராணங்களின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் நம்பிக்கை, அதன் பெயரில் நடக்கும் குற்றங்கள் ஆகியவற்றைப் பேசுகிறது இந்த ‘அசுர்’. இந்தியன் க்ரைம்- த்ரில்லர் ஜானரில் கடந்த மாதம் வூட் ஆப்பில் வெளியானது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.