மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகள் மறுக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மகப்பேறு, குழந்தைகளுக்கான சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோ தெரபி, நரம்பியல் சிகிச்சை ஆகிய அத்தியாவசிய சிகிச்சைகளை கட்டாயம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
கொரோனா எதிரொலி : ஏப்ரல் 30 வரை ஏர் இந்தியா விமானச் சேவை ரத்து
இதனை கடைபிடிக்காத தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி வைரஸின் தீவிரத்தை அறியாமல் சிலர் வீட்டை விட்டு வெளியே வருவதாகத் தெரிவித்தார்.
தோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..!
மேலும் 144 தடை உத்தரவு என்பது மக்களை துன்புறுத்துவதற்கானது அல்ல, மக்களை காக்க வேண்டும் என்பதற்காகத்தான் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது எனவும் அறிவித்துள்ளார்.