இந்தியாவே ஓர் அணியாகி கொரோனா வைரஸ் அடித்து வெளியேற்ற வேண்டும் என கிரிக்கெட் வீரர் பும்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச் விளக்குகளை ஒளிரவிடுவது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பும்ரா, “நாங்கள் சிறப்பான ஆட்டை வெளிப்படுத்தும்போது அனைத்து ரசிகர்களும் உற்சாகத்தில் ஒன்றாகச் சேர்ந்து செல்போன் மூலம் ஃப்ளாஷ் லைட்டுகளை ஒளிரவைப்பீர்கள் மற்றும் கைகளைத் தட்டி பலத்த சத்தம் எழுப்புவீர்கள். மேலும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பீர்கள். தற்போது இந்தியாவே ஒரு அணியாகச் சேர்ந்து இந்த வைரஸ் அடித்து வெளியே அனுப்ப வேண்டும். ஏப்ரல் 5, இரவு 9 மணி, 9 நிமிடங்கள். உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டம் தற்போது தான் ஆரம்பித்திருக்கிறது எனப் பிரதமர் மோடி மக்களுக்குத் தெரிவித்திருந்தார். அத்துடன் கொரோனா எதிர்ப்புக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அவர் அவ்வப்போது சில கோரிக்கைகளை மக்களுக்கு விடுத்து வருகிறார். முதலில் மார்ச் 22ஆம் தேதி அனைவரும் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அடுத்ததாக மாலை 5 மணிக்கு அனைவரும் கைகளைத் தட்டி மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த வரிசையில் நாளை இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் 9 நிமிடங்கள் விளக்குகளை அடித்துவிட்டு டார்ச் விளக்குகள் அல்லது அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த 9 நிமிடங்கள் தெரு விளக்குகளை அணைத்துவிடாதீர்கள்..! – மத்திய அரசு அறிவுறுத்தல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM